MGM Cancer Institute's சார்பில் வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம் புற்றுநோய் விழிப்புணர் நிகழ்ச்சி!..

3 Views
Published
வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம்' என்ற பெயரில் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இரு-நாட்கள் நிகழ்வாக வேடிக்கையும், குதூகலமும் நிறைந்த ஒரு நிகழ்ச்சியை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தியது.

இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டுவிழா கொண்டாட்டம் மற்றும் உலக புற்றுநோய் தினம் 2025-ன் அனுசரிப்பின் ஒரு பகுதியாக இம்மாநகரில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் கூடுதலான மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குநரும், மருத்துவ புற்றுநோயியலின் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்ஏ ராஜா, இந்த இரு-நாள் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

புற்றுநோய், அதன் இடர்காரணிகள், வராமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், மற்றும் குறிப்பாக மாணவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்து கற்பிப்பதே இந்நிகழ்வின் முதன்மை நோக்கமாக இருந்தது.31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தினங்களில் பொதுமக்கள் நேரில் வருகை தந்து இந்நிகழ்வில் பங்கேற்று பலனடையலாம்.

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குநரும், மருத்துவ புற்றுநோயியலின் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்ஏ ராஜா இது குறித்து கூறியதாவது:

"உலகளவில் 2022-ம் ஆண்டில் ஏறக்குறைய 20 மில்லியன் நபர்களுக்கு புதிதாக புற்றுநோய் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கையானது 2052-ம் ஆண்டிற்குள் 35 மில்லியன் என்ற அளவை எட்டுமென முன்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிலும் சூழ்நிலையானது அதிக கவலையளிப்பதாக இருக்கிறது. இதே ஆண்டில் 1.4 மில்லியன் நபர்களுக்கு புற்றுநோய் நம் நாட்டில் ஏற்பட்டதாக அறியப்பட்டது. இந்த பெரும் சவால்கள் இருப்பினும் தொடக்க நிலையிலேயே கண்டறிவதில் முன்னேற்றங்கள், துல்லிய மருத்துவம் புத்தாக்க சிகிச்சை முறைகள் ஆகியவை புற்றுநோய் வந்த நபர்களுக்கு உயிர்பிழைப்பு விகிதங்களை கணிசமாக மேம்படுத்தி இலட்சக்கணக்கான நபர்களுக்கு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.
இருப்பினும் மருத்துவமனைகளால் ஓரளவிற்கு மட்டுமே புற்றுநோயின் பெரும் சுமையை குறைக்க முடியும்; இதை உண்மையிலேயே குறைப்பதற்கு தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதும் அவர்களது ஆரோக்கியம் மீதான பொறுப்பினை தன்முனைப்புடன் கொண்டிருப்பதும் அவசியம்" என்று தெரிவித்தார்.
Category
Oncology
Be the first to comment